Skip to main content

நிறங்கள்


நிலவு தொலைவு
நிலவு கறை
நிலவு குறையும்

நிலவை விடவும்
நெருங்கியே இருக்கின்றன
நின்று எரியத் தொடங்கும்
குழல் விளக்குகள்

சன்னல் கம்பிகளைத்
தெருவில் கிடத்துகிறது
அறையை மீறுமதன்
வெளிச்சம்

அதன் ஒளியில் அமர்ந்து
நிலவை எழுதுகிறேன்.

  

Comments

thamizhparavai said…
பாஸ்...புதுசா இருக்கு...இந்தக் கவிதை..
பொதுவா உங்க கவிதைகள்ல உடனே இல்லன்னாலும், ஒரு செகண்ட் யோசிச்சா மறை பொருள் தெரிந்துவிடும்..
இதுவும் நல்லா இருக்கு.
கையருகே வெளிச்சம் கிடைத்தாலும், தூர நிலவை எழுதியே காகிதமும், மனசும் நிறையும் போல...

//சன்னல் கம்பிகளைத்
தெருவில் கிடத்துகிறது
அறையை மீறுமதன்
வெளிச்சம்//
சட்டங்களுக்குள் அடை பட்ட சன்னல் கம்பிகள், குழல்விளக்கினால், தெருவில் வந்தால் அவைகளுக்கு நிழல்விழாதான்...:-)
Anonymous said…
hello!This was a really outstanding post!
I come from usa, I was luck to seek your Topics in baidu
Also I get much in your Topics really thank your very much i will come every day
நல்லாருக்கே எழுதிய நிலா!
Gowripriya said…
took a little time to get it.... nice :)))))))))
Raja said…
நல்ல கவிதை...வாழ்த்துக்கள்