Skip to main content

Posts

Showing posts with the label not 'u

பொத்தான்

விடுபட்டிருந்த ஐந்தாம் பொத்தானுக்காய் நிராகரிக்கப்பட்டிருந்தது ஒரு சட்டை உள்புறமாய் ஊக்கு குத்திவிட்டும் காலர் பொத்தானைப் பெயர்த்துக் கட்டியும் கால்சட்டைக்குள் செருகிவிட்டு மறைத்தும் அச்சட்டைக்குள் நுழையத் துவங்குகிறார்கள் பொருத்தமானவர்கள் முதல் மூன்றுடன் முழுதும் மறைந்து போக அவ்வைந்தாம் பொத்தான் குறித்த யாதொரு பிரக்ஞையுமற்றுத் திரிந்தது யாசகம் பெற்ற குழந்தை