Skip to main content

சீருடைப்பு

ரெட்டை ஜடை
வெள்ளை ரிப்பன்
வெள்ளிக்கிழமை மட்டும் பூ

கட்டங்களுடன் சட்டை
குட்டைப் பாவாடை
கருப்பு ஷூ

உடன்

வெள்ளை சாக்ஸ்க்குள்
ஒளிந்தவாறு
வெளியே தெரியாமல்
கான்வென்ட் போகிறது
புதுக் கொலுசொன்றும்.

Comments

Vidhoosh said…
convent girls-எல்லாம் பாக்குறது கொஞ்சம் ஓவரு... உங்களுக்கு.

-வித்யா
சாக்சுக்குள் இருக்கும் கொலுசு மிக நல்ல பதிவு நண்பரே
அழகா இருக்கு கார்த்தி ;)

-ப்ரியமுடன்
சேரல்
//வெள்ளை சாக்ஸ்க்குள்
ஒளிந்தவாறு
வெளியே தெரியாமல்
கான்வென்ட் போகிறது
புதுக் கொலுசொன்றும்.


நல்லா இருக்கு நண்பரே.
தலைப்பு நல்லாயிருக்கு கார்த்தி
thamizhparavai said…
நீண்ட நாள் கழித்து அழகோடு வந்துள்ளீர்கள் கார்த்தி...
நல்லா இருக்கு கார்த்தி!
Raja said…
கொலுசுச் சத்தம் மனசத்திருடியதே :)