Skip to main content

ஓவியமொன்று

நாய்க் குட்டிகள்
மட்டுமே
பரிச்சயமான
குழந்தை
முயன்று
முயல் வரைந்திருந்தது..

கச்சிதமான காதுகள்
சற்றே நீண்ட வால்
மற்றும்
கழுத்தில் சங்கிலியுடனும்.

Comments

Gowripriya said…
அருமை.... அழகு :)))))
Unknown said…
தல சூப்பர். கடைசி வரியை வேறு விதத்தில் முடித்திருக்கலாமோ?
அட்டகாசம்!

உங்கள் கவிதைகளில் உயிர் இருக்கிறது. என் நண்பர்களுக்கும் நிச்சயமாகச் சொல்கிறேன்.

-ப்ரியமுடன்
சேரல்

-ப்ரியமுடன்
சேரல்
thamizhparavai said…
சூப்பர்...
:-))

அழகான ... மிக ஆழமான கவிதை ..
குழந்தை வரைந்தது என பார்க்க தெரிந்தால் வாழ்க்கை இனிமை தான்
அருமை அருமை அருமை.