Skip to main content

ஸ்கூட்டி


என்னைத் தேடி
ஒரு பெண் வந்துவிட்டுப் போனதாக
இன்று
இன்னொரு சாவியையும்
சேர்த்துக் கொடுத்தாள்
எதிர் வீட்டுச் சிறுமி

திறக்கத் தெரியாமல்
திணறியவனை
அவள் வந்த
ஸ்கூட்டியிலேயே ஏற்றி
அருகில் அழைத்துப் போனாள்

என் தோளுயரம் எனத் தொடங்கி
தாவணிப் பூக்கள்
தலைப் பின்னல்
என்று முதுகுப் புறமாய்
வழி காட்டிக் கொண்டே வந்தாள்

கொஞ்ச நேரத்திற்கெல்லாம்
அப்பெண்ணின்
வாசனை கூடத்
தெரிந்து விட்டது

கை நீட்டித் தொடும் தூரம்
வந்துவிட்டதும்
வலுக்கட்டாயமாய்
முகத்தைத் திருப்ப முயல

அதில் மீசை இல்லை
என்று சொல்லிக்கொண்டே
உள்ளே ஓடி விட்டாள்
சிறுமி.

Comments

புரியிறமாதிரி கவிதை எழுதுறதை பற்றி நீங்க என்ன நினைக்கீறீங்க!
அழகு.... மிக ரசித்தேன்.

-ப்ரியமுடன்
சேரல்
//கொஞ்ச நேரத்திற்கெல்லாம்
அப்பெண்ணின்
வாசனை கூடத்
தெரிந்து விட்டது//

ரசனை...

கவிதை நல்லா இருக்கு..
:) புன்முறுவல் கவிதை
//கொஞ்ச நேரத்திற்கெல்லாம்
அப்பெண்ணின் வாசனை கூட தெரிந்து விட்டது//
கார்த்தி டச்!