Skip to main content

Watch it Man

உறக்கம் களவுபோன
இரவொன்றில்
உலவிக்கிடந்தேன்

தகர நாற்காலியில்
தலை கவிழ்ந்து
தூங்கிக் கொண்டிருந்தான்
வணிக வளாகத்தின்
வெளிக்காவலன்

மனைவியோ
மகனோ
மற்றொருவரோ
நேற்றைய பகலில்
திருடியிருக்கவேண்டும்
அவனிடமிருந்தும்..

Comments

கார்த்தி ,
அருமை
///மனைவியோ
மகனோ
மற்றொருவரோ
நேற்றைய பகலில்
திருடியிருக்கவேண்டும்
அவனிடமிருந்தும்..///

ஆஹா...ஆஹா.....அருமை கார்த்தி...
கார்த்தி,
கவிதை அருமை.
ஏன் ஆங்கிலத் தலைப்பு ?

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
u r watching everything.இதுல ஒரு வலி இருக்குது. இரவுக் காவல்காரனுக்குக் குடும்பம் என்பது பகலில்தான்.

நல்ல கவிதை.
super ..

-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா
J S Gnanasekar said…
அருமை.

- ஞானசேகர்
anujanya said…
வாவ், அட்டகாசம். நல்லா எழுதுறீங்க கார்த்தி.

அனுஜன்யா