Skip to main content

பொத்தான்

விடுபட்டிருந்த
ஐந்தாம் பொத்தானுக்காய்
நிராகரிக்கப்பட்டிருந்தது
ஒரு சட்டை

உள்புறமாய்
ஊக்கு குத்திவிட்டும்

காலர் பொத்தானைப்
பெயர்த்துக் கட்டியும்

கால்சட்டைக்குள்
செருகிவிட்டு மறைத்தும்

அச்சட்டைக்குள்
நுழையத் துவங்குகிறார்கள்
பொருத்தமானவர்கள்

முதல் மூன்றுடன்
முழுதும் மறைந்து போக
அவ்வைந்தாம் பொத்தான் குறித்த
யாதொரு பிரக்ஞையுமற்றுத்
திரிந்தது
யாசகம் பெற்ற குழந்தை

Popular posts from this blog

TeA LeavEs # 6

The Freight Flawless alone flies.  This is my first ever hands on with FedEx, or any international courier for that matter.  A little over 2 kg thing is being pigeoned for the past 3 days, with a tag of a potential bollywood film title 'Indianapolis to India'.  The convenient part of it being the mail i received on day 1 with the tracking number hyperlinked.  Just one click, and it shows you with minutes precision, the weight of it and the wait for it.  Hassle free!  And for those who are just ready to suspect me, before you have a go, visit here for the cargo.  Its really not late.  U could also pen your name on a new one paying 30$ less.  Just have to be as lucky as i am. The Fright  Let me amend it further; Flawless and Fearless fly.  On that day, Lance Klusener was flawless.  Steve Waugh was fearless.  English summer '99 witnessed a day which portrayed which one of the two prevailed.  However faint it sounds, Faith is the nearest i choose for the word Fearless.  Faith …

பாஸ்போர்ட் சைஸ்!

முருகன் டாலர்
சட்டைக்கு வெளியே இருப்பது
பத்தாவது பரீட்சை எழுத
முதன் முதலில் எடுத்தது

கூலிங் கிளாஸ் போட்டது
நாங்கள் நண்பர்கள்
சேர்ந்து சென்று
தனித் தனியே எடுத்துக் கொண்டது
இன்றும் வீட்டுக்குத் தெரியாது

அடுத்தது விண்ணப்பத்திற்கு.
கருப்பு கோட் சிவப்பு டை காம்பினேஷன்
வேலை கிடைக்காவிட்டாலும்
கல்யாணம் கூட்டிக் கொடுத்தது.
ரொம்ப நாள் இருந்தது

அப்புறம்
வங்கிக்கணக்குக்கு ஒருதரமும்
வண்டி வாங்கியபோது ஒருதரமும்

ரேஷன் கார்டுக்கு அதிலொன்றையே
டெவலப் செய்ததாய் நினைவு

அதற்கப்புறம் எடுத்ததெல்லாம் டிஜிட்டல்
இடது நெற்றித் தழும்பில்லாமல்
பளிச்சென்றிருக்கும்.

இப்போது
நீங்கள் பார்த்து விட்டு வந்திருப்பது கூட
டிஜிட்டல் தான்
எனக்கு அவ்வளவாகப் பிடிக்காது
லைப் இன்சூரன்ஸ்க்காக எடுத்தது

மகனுக்கோ மருமகளுக்கோ
பிடித்துப் போயிருக்க வேண்டும்
நாளிதழ்களுக்குக் கொடுத்துவிட்டார்கள்
தோற்றம் மறைவு தேதிகளோடு.

Tea Leaves #8

Instant print
I may be old fashioned, 'digital is great, but papers are perfect'.  The love for instant cameras started from good old toddler days.  A portrait peeping out in a minute is an unmatchable joy.  If you are with me on this, then take these picks.
As the name suggests, 'Fujifilm instax mini 90 neo' is classic. The brown coloured piece is just what you wanted. Retro looks with a view finder, bulb exposure and quite a few modes, eyes in a party can't give a miss. 150$ won't burn your pocket too. Only trouble is that it lacks any digital capacity. You can't store anything, but to shoot and print. Also, mind, the cost per print can be 20 Indian rupees per picture!
My vote though is reserved for the upcoming ' Polaroid Snap' an instant and digital camera from a company that just revived itself from bankruptcy. This one will hit the stores in four colours, print using Zero-ink technology (seriously! no ink, but heat activation of colorized crys…