Skip to main content

படிப்படியாக..


ஒவ்வொரு படியிலும்
இரண்டு கால்கள் வைத்து
இறங்கிக் கொண்டிருக்கிறது
குழந்தை

அதன் விரல் பிடித்தவாறு
இறங்கிக் கொண்டிருக்கிறது
அவ்வாறே
உடன் வருபவள் வயதும்.