:::: MENU ::::
  • Suitable for all screen sizes

  • Easy to Customize

  • Customizable fonts.

  • July 25, 2010
அனன்யா
ஆசீர்வதிக்கப்பட்டவள்

இச்சிறு வயதில்
ஒன்பது மாடிகள் லிப்டில் கடந்து
அப்புறம் பதினாறு படிகள் ஏறி
தினமும் சூரியனைப்
பார்த்து வருகிறாள்

பல்லாங்குழி டிவிடி என்றால் உயிர்
தேடிப் பிடித்து வாங்குகிறாள்
இருபத்தி நாலு ஸ்டேஜுகள்
தாண்டியிருப்பதாய் ஒருதரம் சொன்னாள்

பழைய போட்டோக்களைப்
பார்த்த பிறகு
வட்டமாய் நெற்றியில்
டட்டூ வரைந்து கொள்ளவும்
பிரியப்பட்டிருக்கிறாள்

அனன்யா ஆசீர்வதிக்கப்பட்டவள்
அப்படித்தான் சொல்கிறார்கள் அனைவரும்

அவளின் ஆறாவது பிறந்தநாளுக்கு
சேவல் போலக் கூவியெழுப்பும்
அலாரம் கடிகாரம் தரலாம் என்றிருக்கிறேன்.
A call-to-action text Contact us