:::: MENU ::::
  • Suitable for all screen sizes

  • Easy to Customize

  • Customizable fonts.

  • December 28, 2009
சாகும் முன்
இதைச் சொல்லியே ஆக வேண்டும்

நீங்கள் திறமைசாலிகள்

எவ்வளவு உழைத்திருப்பீர்கள்
எம் வெளியில் உங்களை உருவாக்கிக்கொள்ள

எத்தனை பிரும்மாண்டம்
நீங்கள் நிறுவியிருக்கும் இந்நகல்கள்

உயரமும் வேகமும் செலுத்திப்
பேரிரைச்சலில் ஒளித்து விடுகிறீர்கள்
அத்தனை போலித்தனத்தையும்

உங்களுடன் பேதமில்லை

நிஜமென்று பயந்தும் வியந்தும்
பார்த்து வரும் எம் குழந்தைகளுக்காகவே
இதைச் செய்கிறேன்

நான் மட்டுமே செய்கிறேன்

மற்றபடி
தொடர்ந்து நீங்கள்
தாராளமாய் வளர்த்து வரலாம்
எங்களினத்தை..

நாளைய நாளிதழோடு போய்விடுவேன் நான்
பறவையொன்று மோதி
விமானம் நொறுங்கிச் சாவென்பதாக

மறுநாளும்
முன்னெப்போதும் போலவே
உங்களுச்சியில்
எச்சமிடவும் அச்சம் கொண்டே
பறந்திருக்கும் எம் சமூகம்.
A call-to-action text Contact us