:::: MENU ::::
  • Suitable for all screen sizes

  • Easy to Customize

  • Customizable fonts.

  • August 25, 2009
மூன்று மனிதர்களைப் பற்றிய
கதை எழுதுபவர்களிடம்
ஒரு ஒழுங்கு இருந்து விடுகிறது

அவர்கள்
ஒருபோதும் குழந்தைகளை அனுமதிப்பதில்லை

ஒன்றுக்கும் அதிகமான பெண்களையும்
கவனமுடன் தவிர்த்து விடுகிறார்கள்

இரண்டு மனிதர்களைப் பற்றிய
இரண்டு கதைகளின் குறிப்புகள்
அக்கதைகளில் இருக்கும்

மிக முக்கியமாய் முக்கோணமொன்றும்

ஒருவர் இறப்பது
சுபமென்று வருவதால்
ஒருவர் மட்டுமே இருப்பதாகவும்
முடிக்கத் தெரிந்திருக்கிறார்கள்

வெகு சிரத்தையுடன்
மூன்று மனிதர்களை மட்டும்
சித்தரித்தே அவர்கள்
கதை எழுதி வருகிறார்கள்

இருந்தாலும்
எல்லாக் கதைகளிலும்
ஒரு மிருகம் இருந்து விடவே செய்கிறது.
A call-to-action text Contact us