:::: MENU ::::
  • Suitable for all screen sizes

  • Easy to Customize

  • Customizable fonts.

  • June 11, 2009
படகின் முதுகில்
காதலெழுதுபவன்
பள்ளிச் சீருடைக்குள்
கிளிஞ்சல் நிறைப்பவன்
பசித்தபடியே
சுண்டல் விற்பவன்
பாதியழிந்த
மணல் வீடு
பாதமழித்த
நண்டு வளை
ஒற்றைச் செருப்புகள்
ஒதுங்கிய ஆணுறைகள்

நீரன்றி ஒன்றுமேயில்லாதிருந்தும்
நீலமாய் ஆக்கிரமித்திருந்தது
கடல்..

எல்லாமிருந்து விரிந்திருந்தும்
வெறும் கோடாய்க் குறிக்கப்பட்டிருந்தது
கடற்கரை..பிள்ளைகளின்
புவியியல் புத்தகத்தில்.
A call-to-action text Contact us