:::: MENU ::::
  • Suitable for all screen sizes

  • Easy to Customize

  • Customizable fonts.

  • June 12, 2009
மனிதர்களால்
மறக்கப்பட்ட
மரமாய்த் தேடி
மழைப்பறவையொன்று
கூடு கட்டியிருந்தது

அது கூவும் குரலுக்கேற்ப
மழை பொழிவதாய்க்
கண்டவனொருவன்
ஏவி விடக் குழுமிக்
கும்பிட்டிருந்தனர்
கொஞ்ச காலம்.

மழை பொய்த்தவொரு
பின்னாளில் இன்னொருவன்
ஏதோ கூறக்
கூட்டமாய் வந்து
கொளுத்திப் போயினர்
அதன் கூட்டை.

என்றாவது
நினைவில் கடந்து போகும்
அலகில் புழு போன்றவொன்றைக்
கவ்வியவாறு
கூடு தேடியலைந்த பறவை..

மழைக்கான
சாத்தியக்கூறுகளற்ற
இக்கோடையில்
அதே மரத்தின்
நிழல் தரையில்
தாதுவான கிளையொன்றைத்
தேடியமர்கிறான் ஒரு
பிறழ்வு மனக்காரன்

சற்று நேரத்திற்கெல்லாம்
கூடும் கட்டத் தொடங்கியிருந்தான்.
A call-to-action text Contact us