:::: MENU ::::
  • Suitable for all screen sizes

  • Easy to Customize

  • Customizable fonts.

  • June 05, 2009
##
ஒரு வாசல்
இரு சுவர்கள்..
இருந்தும்
எண்ணிலடங்காக் கடைகள்
சலூன்காரன் கண்ணாடிகளுக்குள்..

##
எதிரெதிர்க் கண்ணாடி வைத்து
எளிதாய்க் காண்பித்தாலும்
முகத்திற்குப்
பின்னால் தான் தெரிகிறது
முதுகு..
சலூன்கடையிலும்.

##
சுழலும் நாற்காலிக்காய்ச்
சென்றிருந்தது
குழந்தை

சுவர்ப் படங்களுக்காய்ப்
போயிருந்தேன்
நான்

வாடகை பாக்கிக்கென
வந்திருந்தார்
கடைக்குச் சொந்தக்காரரும்.


##
பெயர்ப் பலகையில்
நாயகன்
மாறியிருந்தான்
உள்ளே அதே அவன்.

##
முடியளவும்
முடிகிறது
அவனால்.

##
வந்து போயிருந்தது
எவனாயிருந்தாலும்
சலூன்காரனுக்கு
மயிர்.

##
என்னிடம்
குறைவாய் முடி
அவனும்
சற்று மெதுவாய் வெட்டினான்
இருவருக்கும்
வயதாகியிருந்தது கண்ணாடியில்
.
A call-to-action text Contact us