:::: MENU ::::
  • Suitable for all screen sizes

  • Easy to Customize

  • Customizable fonts.

  • May 26, 2009
காது வழிந்து
கூந்தல் சிந்தும்
துளி நீரைப்
பாசுரங்கள் படிந்து வரும்
காற்றோடு பேரம் பேசுமுன்
கத்தரிப்பூத் தாவணி..

விரல் சொட்டும்
வெள்ளைப் புள்ளியீன்று
பரங்கிச்செடியெனப்
படர்ந்து போகும் வாசல்..
சாணிப் பிள்ளையார்
சிண்டில்ஒற்றைப் பூவுடன்

தொடர்ந்த புத்தகமொன்றில்
நீ புலர்ந்திருக்க
சன்னலுக்கு
வெளிச்சம் பூசி
விளக்கணைத்துப் போகும்
விடியல்..

உரக்கக் கலையாத
உறக்கத்தினூடே வெளியேறிச்
செம்பருத்தியொன்றைச்
செருகியிருப்பேன்
என் வீட்டுக் கோலத்திலும்..

சோம்பேறியென்றென்னை
நின்பால்
நிதமொருவர்
முறையிட்டிருக்கப்
பதிலெதுவும் பகராது...

பின்பு
பால்காரன் மணியொலியில்
பாத்திரங்களாய்ச் சந்திக்கையில்
சுருக்கமாய்ச் சிரித்திருப்பாய் நீ
பூத்திருக்கும்
செம்பருத்தி முன்பு..
A call-to-action text Contact us