:::: MENU ::::
  • Suitable for all screen sizes

  • Easy to Customize

  • Customizable fonts.

  • May 02, 2009
அழுகின்ற குழந்தையொன்றில்
அடங்கிப் போகின்றதொரு
தூரத்துப் புகைவண்டி..

அங்குமிங்குமாய்த் தோன்றித்
துணை சேர்க்கின்றன
தெரியாத நாய்க் குரைப்புகள்

எங்கோ தூண்டப்பட்ட திரியில்
பெரிதாகிறது என்
சன்னல் கம்பிகளின் இடைவெளி

தொலைக்காட்சிக்குத் தொலைவிலும்
ஒன்றையொன்று தழுவாமலும்
நட்சத்திரங்கள் வானில்

மழைக்காலத்தில் விடுபட்டுப் போன
கவிதையொன்றை ஈரமின்றி
எழுதி மீள்கிறதிந்த
இரவு மின் வெட்டு

உரக்கக் கேட்டிருந்தும்
உன் மூன்றாவது
தொலைபேசி அழைப்பையும்
மௌனமாய் நிராகரிக்கிறேன்
நிபந்தனையின்றி.
A call-to-action text Contact us