:::: MENU ::::
  • Suitable for all screen sizes

  • Easy to Customize

  • Customizable fonts.

  • March 29, 2011
பழைய டைரி ஒன்றில் 
பிப்ரவரிஅத்தியாயத்தைப்
பிளந்தவாறு நின்றது
அந்தக் காதலர் தினம்

என்னைப் பற்றிய இடது புறமும்
நம்மைப் பற்றிய வலது புறமுமாய்

இப்போதெல்லாம்
நாம் என்பதாய்
ஏதுமில்லை என்றாலும் 
குறிகள் தவறக்கூடிய
குளிர்கால இவ்விரவில்
நீ வந்து போயிருந்தது
லீப் வருடமென
நினைவுக்கு வந்தவனாய்

வலப்புற வெற்றிடத்தில்
நமக்கான
இருபத்தொன்பதாம்
கவிதையை எழுதத் தொடங்கினேன்
A call-to-action text Contact us