:::: MENU ::::
  • Suitable for all screen sizes

  • Easy to Customize

  • Customizable fonts.

  • April 07, 2009
அம்மா....கோவிலுக்குப் போகிறேன்!
அப்படித் தான் அறிமுகமானாள்..
எதிர் வீடென்றெல்லாம்
ஏனோ எதுகை
தரத் தோன்றவில்லை
அண்ணாந்து பார்த்தது
இலக்கியமாகாத
போதிலும்
அவள்
இருந்ததென்னவோ
மாடி
வீட்டில் தான்!!
முதல் சில நாட்கள்
நான்
பார்ப்பதை
அவள் பார்க்கவில்லை...
பிறகோ நான் பார்ப்பதை
அவள்
பார்ப்பதில்லை!!
பேசியதாகவும் எதுவுமில்லை
அவளிடம்
...
இரவல் பெற்ற
காப்பிப்
பொடிக்குள் துழாவிப் பார்த்தும்!!
ஒன்றரை ஆண்டுகள்
ஒன்றுமின்றிக் கடந்தும்
இங்கு எழுதப்
போதுமானதாக...
அவள்
ஊர் தொலைத்த ஓர் இரவில்
உதிர்த்துப் போயிருந்த
புன்னகையொன்று...
அவள் போன பிறகு போனதில்லை என்றாலும்...
இப்படி எப்போதேனும்
எழுதுகையில்
கோயில் தமிழாக இருந்தாலும்
கோவில் அழகாக இருக்கிறது.
A call-to-action text Contact us