:::: MENU ::::
  • Suitable for all screen sizes

  • Easy to Customize

  • Customizable fonts.

  • February 12, 2009
உன் நினைவூறிக் களைத்துக்
கிறுக்கிக் கிடந்த
தினமொன்றின் பின்னிரவில்

என் சன்னல் கம்பியில்
ஒரு பட்டாம்பூச்சி
வந்தமர்வதற்கும்
வெளியே
அடைமழை தொடங்குவதற்கும்
சரியாக இருந்தது

நான் எழுதுவதை அத்தோடு
நிறுத்தினேன்..

தொடர்பவர்கள்
என்னைப் பட்டாம்பூச்சியென்றும்
உன்னை மழையெனவும்
உருவகித்துவிடக் கூடும்.
A call-to-action text Contact us